search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீ விபத்து தடுப்பு"

    • தீக்காயத்தை அழுத்தி துடைக்க கூடாது.
    • தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.

    காங்கயம் :

    தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு, காங்கயம் தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் அரசு மருத்துவமனை, காங்கயம் பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட நகரின் மக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    துண்டுபிரசுரத்தில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்கக்கூடாது, சமை–யல் செய்யும் இடத்தின் அருகில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக்கூடாது, சமையல் முடிநதவுடன் அடுப்பை முழுவதும் அணைத்துவிடவேண்டும். கியாசை பயன்படுத்தி சமைத்து முடித்ததும் பின்னர் பர்ணர் மற்றும் சிலிண்டர் வால்வுகளை முழுவதுமாக மூடிவிட வேண்டும்.

    வீட்டினுள் கியாஸ் கசிந்து இருக்கும் போது மின் சுவிட்சுககளை பயன்படுத்தக்கூடாது. செல்போன் உபயோகிக்கக்கூடாது. சமைக்கும் போது பருத்தி ஆடைகளை அணியவேண்டும். சிம்னி விளக்குகளை படுக்கை அருகில் வைக்கக்கூடாது. படுக்கையில் புகைபிடிக்கக்கூடாது. மக்கள் கூடி உள்ள இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. ராக்கெட் போன்ற வெடிகளை திறந்தவெளி மைதானத்தில் வெடிக்க வேண்டும். ஆடைகளில் தீப்பற்றிக் கொண்டால் ஓடாமல் படுத்து உருண்டும், போர்வையால் மூடி தீயை அணைக்கவும். தீ புண்ணில் குளிர்ந்த நீரை ஊற்றவும். பேனா மை, எண்ணெய் போன்றவைகளை உபயோகிக்கக்கூடாது. தீக்காயத்தை அழுத்தி துடைக்க கூடாது. புகை சூழ்ந்து உள்ள இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்.

    தீ விபத்து ஏற்பட்டால் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். தொழில் கூடங்களில் தீயை ஆரம்ப நிலையில் அணைக்க தீத்தடுப்பு சாதனங்களை உபயோகிக்க வேண்டும். தொழில் கூடம் மற்றும் பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பு சாதனங்களை அணியவேண்டும். உள்ளிட்ட பாதுகாப்பு குறிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

    இதில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்ககளை வினியோகித்தனர்.மேலும் இதை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு ஒத்திகையும் நடத்தப்படும் என காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் தெரிவித்தார்.

    • அகல் விளக்குகளை பாதுகாப்பாக அணைப்பது வீடுகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    அவினாசி : 

    திருப்பூரை அடுத்த திருமுருகன் பூண்டி அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடி வளாகத்தில் அவினாசி தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவினாசி தீயணைப்பு நிலைய அதிகாரி பொன்னுசாமி கலந்து கொண்டு, வீடுகளில் பயன்பாடு இல்லாத நேரங்–களில் கியாஸ் சிலிண்டரை ஆப் செய்து வைப்பது, குத்துவிளக்கு மற்றும் அகல் விளக்குகளை பாதுகாப்பாக அணைப்பது உள்பட வீடுகளில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இதே போல் பெரிய கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போது, முதற்கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதையும், விபத்தில் இருந்து தப்பிப்பது மற்றும் மற்றவர்களை அங்கிருந்து மீட்பது தொடர்பான பயிற்சியையும் தீயணைப்புத்துறையினர் வழங்கினார்கள். தீ விபத்தின் போது தீயை அணைப்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது போன்றும் முன்னணி தீயணைப்பு வீரர்கள் பாபு, சீனிவாசன் உள்பட 10-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தத்ரூபமாக நடித்து காட்டினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது
    • மின் இணைப்பை துண்டித்து கசிவு ஏற்பட்ட சிலிண்டரை சாக்கால் போர்த்தி வெளியே கொண்டு வந்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி பழைய போஸ்ட் ஆபீஸ் அருகே வசித்து வருபவர் முருகன். இன்று காலை இவரது மனைவி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சமையல் எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது.

    உடனடியாக நிலக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    மின் இணைப்பை துண்டித்து கசிவு ஏற்பட்ட சிலிண்டரை சாக்கால் போர்த்தி வெளியே கொண்டு வந்தனர். மேலும் வீட்டில் இருந்த மற்ற சிலிண்டர்களையும் அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கியாஸ் சிலிண்டரில் சமையல் செய்யும் போது பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படும்படி அவர்கள் அறிவுரை வழங்கினர்.

    ×